அடிக்கடி மின் தடை..

சோழவந்தானில் அடிக்கடி மின்தடை பொதுமக்கள் அவதி :

சோழவந்தான் செப்டம்பர் .5 .

சோழவந்தானில் துணை மின் நிலையம் சோழவந்தான் நகர் மற்றும் புறநகர் மின்சார அலுவலகம் உள்ளது சோழவந்தான் அதனைச் சுற்றி சுமார் 30 கிராமங்களுக்கு இங்கிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது இரண்டு வார காலமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது .
மின் இணைப்பு பழுதாகி நாள் உடனே வந்து பழுது நீக்குவது கிடையாதாம்.
மாலை நேரங்களில் தற்போது, மழைக்காலமாக இருப்பதால் இருண்ட சூழ்நிலை இருக்கிறது இதனால் மின் விளக்கு அவசியமாக பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது .
அப்போதுதான் மின் பணியாளர்கள் மாலை சுமார் 6 மணியளவில் மின்சாரத்தை தடை செய்து பணியாளர்கள் வேலை செய்வதாக தெரிகிறது இதுமட்டுமல்லாது, புது இணைப்புக்கு வேலை செய்து இணைப்பு கொடுப்பதும் மாலை நேரத்தில் பணி செய்கிறார்கள் இதனால், மணிக்கணக்கில் மின்சாரம் தடைபடுகிறது பகல் மற்றும் இரவு நேரங்களில் காற்று வீசுவதால் மின்சாரம் தடை வருகிறது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் நகர்ப்புறங்களில் தடைபடுகிறது புறநகர்ப் பகுதியில் பல மணி நேரங்களாக மின்சாரம் தடைபடுகிறது. சமீபகாலமாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது நிலவி வரும் அடிக்கடி மின்தடையை போக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது தற்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொது மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கிறது இதுகுறித்து அலுவலகத்தில் கேட்டாள் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் இது சமீப காலமாக நடந்து வருகிறது இதற்கு முன்பாக பணிபுரிந்த பணியாளர் இரவு பகல் பாராமல் பலத்த காற்று இடி மின்னல் மழை மின்தடை குறை கூறிய சிறிது நேரத்திலேயே பழுது நீக்கி மின்சார சப்ளை செய்து கொடுப்பார் தற்போது இங்கு உள்ள அதிகாரிகள் உடைய தொல்லையால் அவர் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் எப்பொழுதும் போல் சீராக மின் சப்பளை கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: