அதிகரித்து வரும் விமான சேவைகள்..

மதுரை விமான நிலையத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் விமான சேவைகள். மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி என தினமும் எட்டு விமான Gசவைகள் தொடர்கிறது.

மதுரை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் மதுரை விமான நிலையம் உள்ளது.

இங்கு கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி கொரான தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

பின்பு மே மாதம் முதல் விமான சேவைகள் தொடங்குகின்றன இதில் தினமும் மதுரையிலிருந்து 23 விமான சேவைகள் குறிப்பாக 17 உள்நாட்டு சேவை, 6 வெளிநாட்டு விமான சேவை இருந்தது.

மே மாதம் முதல் விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவைகளை மூன்று விமான சேவைகள் துவங்கியது.

தற்போது படிப்படியாக அதிகரித்து மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி என தினமும் எட்டு விதமான விமான சர்வீஸ்கள் தொடர்கின்றன.

மத்திய அரசு உத்தரவை தொடர்ந்து வெளிநாட்டு விமான சேவைகள் தொடரும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: