கோயில் உண்டியல் பணம் திருட்டு..

சாத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது வெங்கடாசலபுரம். இங்கு என்ஜிஓ காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் கோவிலுக்கு வெளியே இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவில் பூசாரி பவுன்ராஜ், கோவிலுக்கு வந்த போது உண்டியல் உடைந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பவுன்ராஜ் சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: