வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது..

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த ஐந்து பேர் கைது…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது தாயில்பட்டி. இந்தப்பகுதியில் சட்டவிரோதமாக வீடுகளில் சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, எஸ்ஐ சதீஸ்குமார் தலைமையில் போலீசார் அந்தப்பகுதி வீடுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். தாயில்பட்டியில் கருப்பசாமி, அய்யாசாமி, குமார் வீடுகளிலும், கலைஞர் காலனியைச் சேர்ந்த முத்துவேல், கருப்பசாமி வீடுகளிலும் சரவெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. வெம்பக்கோட்டை போலீசார், சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்து, தயாரித்து வைக்கப்பட்டிருந்த சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: