LatestNews
பதினொருவது தடவை நன்கொடை வழங்கிய முதியவர ்:

மதுரையில் பதினொருவது தடவை பத்தாயிரம் நிவாரன நிதி வழங்கும் முதியவர்:
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பதினொருவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இடம் வழங்கினார் இந்த முதியவர்.
தத
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்
பாண்டியன். இவர், மதுரை மாட்டுத் தாவணி, பூ மார்க்கெட்டு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெறுவது வழக்கமாம்.
இவ்வாறு, பெறும் யாசகப் பணத்தில் சாப்பாட்டு செலவு போக மீதி பணத்தை சேமித்து பல்வேறு நல்லப் பணிகளை செய்து வருகிறார் பூல்
பாண்டியன்.
இவர், ஏற்கெனவே தாம் யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பதினொருவது தடவையாக ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிதிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் வழங்கினார்.
முதல் முதலாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ரூபாய் 100 ரூபாய் பெற்றுக்கொண்ட அவர் ராசியில் தான் இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரம் கொடுத்து உள்ளேன் அமைச்சர் செல்லூர் ராஜூ எனது நன்றி என்ன சொன்ன பூல் பாண்டியன்.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.
LatestNews
படம்

*மதுரை டவுன்ஹால் ரோட்டில் பயங்கர மின்னணு கடையில் பயங்கர தீ விபத்து:
மதுரை
மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அருகே மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 200 கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று 10.45 மணிக்கு டவுன்ஹால் ரோடு வடக்கு பெருமாள் தெப்பம் திடீரென ஒரு மின்னணு கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, டவுன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்
ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென 15க்கும் மேற்பட்ட கடைகளில் பற்றி எரிந்தது.
3 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்து குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.