ஐடி நிறுவனங்களை ஈர்க்க அரசு முயற்சி..அமை ச்சர்

புதிய வாய்ப்புகளை உருவாக்க, ஐ.டி., முதலீடுகளை பெற மாநாடு உதவியாக அமையும், அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு மதுரை, ”உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.,) முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்கிறது,” என மதுரையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அமெரிக்கா சிலிகான்27வது எடிஷன் ஆப் டைகான் மாநாடு காணொலி காட்சி மூலம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்தது. உலகளாவிய ஐ.டி., துறை தொழில்முனைவோர்பங்கேற்றனர். இதில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் உதயகுமார் பேசினர்.முன்னதாக அமைச்சர் கூறியதாவது: தமிழகம் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இல்லாத மனிதவளம் மிக்க மாநிலம். இங்கு முதலீட்டாளர்கள் தொழில்துவங்குவதன் மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம். இதுகுறித்து அமெரிக்கா சென்றிருந்த போது ஐ.டி., துறை தொழில் முனைவோருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.18 மாதங்களில் 12,525 கிராம ஊராட்சிகளில் ஆப்டிக்கல் பைபர்கேபிள் மூலம் பிராட்பேண்ட் தொலைதொடர்பு வசதி செய்யப்படவுள்ளது.மாணவர்களுக்கு 54 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுஉள்ளன. இண்டர்நெட்வசதி மூலம் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு பெற முடியும். இதுபோல இத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க, ஐ.டி., முதலீடுகளை பெற மாநாடு உதவியாக அமையும், என்றார்.கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: