எம்.எல்.ஏ. நடத்திய ரகசிய யாகம்..

புளியங்குடி அருகே உள்ள மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோவிலில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இரகசிய யாகம் வளர்த்து சுவாமி தரிசனம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தாருகாபுரம் கிராமத்தில் உள்ள மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். ஐம்பூததலங்களில் இரண்டாவது ஸ்தலம் நீர் தலமாகும். அதனால் இத்திருக்கோவிலில் இராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தனது ஆதரவாளர்களுன் இரகசிய யாகம் வளர்த்து சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பு : அதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் இராஜேந்திரபாலாஜி இழந்த மாவட்டச்செயலாளர் பதவியை கோவில், கோவிலாக சென்று வழிபாடு நடத்தி மீண்டு மாவட்ட பொறுப்பாளராக பதவி பெற்றதால், இந்த யாகம் மூலம் மாவட்ட செயலாளர் பதவியை பெற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் யாகம் வளர்த்ததாக கூறப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: