ஏடிஎம்மில் நூதன திருட்டு

ராஜபாளையத்தில் ஏடிஎம் மில் பணம் எடுக்க உதவி செய்வது போல நூதன திருட்டு….
ஏமாற்றி திருடிய பணத்தில், கடனை அடைத்த சிவகாசி வாலிபர் கைது…..

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. கடந்த வாரம் மகேஸ்வரி, ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாததால், அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர், உதவி செய்வதாக கூறி, அவரது ஏடிஎம் அட்டையை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த அடுத்த நாட்களில் மகேஸ்வரியின் செல்போனுக்கு அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளது. அவரின் வங்கி கணக்கிலிருந்து 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. இதனால் பதறிப்போன மகேஸ்வரி ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில்
சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் மாரிமுத்து (வயது 36) இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மாரிமுத்துவை போலீசார் விசாரித்த போது,
திருடப்பட்ட பணத்தில் 90 ஆயிரம் ரூபாயை, தான் வாங்கியிருந்த கடனை அடைத்ததாகவும், 40 ஆயிரம் ரூபாய்க்கு இருசக்கர வாகனம் வாங்கியதாகவும் தெரிவித்தார். பெண்ணை ஏமாற்றி ஏடிஎம் மில் பணம் திருடிய மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: