தடகள வீரருக்கு பாராட்டு விழா..

தயான் சந்த் விருது பெற்றுள்ள மாற்றுத்திறனாளியான தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .சரவணன் திமுக தலைவர் ஸ்டாலின் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பாராட்டி நிதியுதவி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருது பெற்றுள்ள மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் திமுக தலைவர் ஸ்டாலின் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அவரை பாராட்டி நிதியுதவியும் வழங்கப்பட்டது . மேலும் விருது பெற்ற தடகள வீரர் ரஞ்சித் குமார் தன்னை கொளரவப்படுத்திய திமுக தலைவர், திமுக இளைஞரணி செயலாளர் , திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் . சரவணன் ஆகியோருக்கு நன்றியினையும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் . சரவணன் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்த்து வரும் தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு நிரந்தர பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: