கனமழை..ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..

திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை…
சதுரகிரி மலைப்பகுதி ஓடைகளில் நீர் வரத்து அதிகரிப்பு …..

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வெப்பச் சலனம் காரணமாக, விருதுநகர் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கனமழை பெய்வதால் சதுரகிரிமலைப் பகுதிகளான, சந்திரமோகன் கோவிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சதுரகிரி மகாலிங்கமலை கோயிலுக்குச் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகி்ன்றனர். மேலும் வனப்பகுதிகளுக்குள் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: