அரசு மதுபானக் கடையில் திருட்டு இருவர் கை து..

இராஜபாளையம் டி.பிமில்ஸ் சாலையில் அரசு மதுபானக் கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது. 50 மதுபாட்டில்கள் பறிமுதல். தெற்கு காவல் நிலைய குற்றவியல் போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டி.பிமில்ஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் கடந்த 25ம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ஒருலட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 630 மதுபாட்டில்களை திருடி சென்றனர்
மேலும் சிசிடிவி கேமரா, காட்சிப் பதிவு பெட்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்தினை பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினரை தீவிரபடுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி ஓடைத்தெரு பகுதியை விக்னேஷ்வரன் இராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் திருட்டை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்களிடமிருந்து 50மதுபான பாட்டில்கள் காவல்துறையினர் கைப்பற்றினர் இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்த தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: