மரம் விழுந்து அபாயம் ஏற்படலாம்?

பொதுப்பணித் துறையினரின் அலட்சியம்.
மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் மிகவும் பழமையான வேப்பமரம் தூர் பெயர்ந்து விழும் நிலையில் நீண்ட காலமாக. இந்த வளாகம் பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் வருவதால் இதை அகற்றக்கோரி கால்நடைத்துறை ரீதியாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பல முறை கோரிக்கை விடுத்தும், நாளிதழ்களில் செய்தி வெளியிட்டும் இதை அகற்றுவதற்கான எந்த ஒரு முயற்ச்சியையும் பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். இதனிடையே இன்று (02.9,20) அதிகாலை இந்த மரம் முறிந்து விழுந்து மின் வயர்ககள், மற்றும் மதில் சுவர்கள் இடிந்து யாரும் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. நல்ல வேளை அதிகாலை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: