Connect with us

LatestNews

வேன் விபத்து ஒருவர் பலி..

Published

on

நின்ற வேன் மீது பின்னால் வந்த வேன் மோதி ஒருவர் பலி: ஏழு பேர் காயம்

மதுரை
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலைகள் பழுதடைந்து நின்ற சரக்கு வேன் மீது பின்னால் வந்த சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து என்ற சரக்கு வேன் மீது கோயம்புத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
கோயம்புத்தூர் காந்திபுரம் சிவானந்தா காலனியை சேர்ந்த எட்டு பேர் சரக்கு வேனில் கோவையிலிருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் இயந்திரம் பழுது நிற்கும் வேலைக்காக ஓட்டுனர் உட்பட எட்டு பேர் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர் வேனை கோபி என்பவர் ஓட்டி வந்தார் வேன் இன்று அதிகாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது சாலையில் ஏற்கனவே மதுரையிலிருந்து சென்ற சரக்கு வேன் டயர் வெடித்து பழுதாகி நின்று கொண்டிருந்தது இதனை கவனிக்காத ஓட்டுனர் கோபி முன்னால் நின்ற சரக்கு வேன் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் வேனில் பயணம் செய்த ஏழு பேர் பலத்த காயமடைந்த இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் திருமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வேன் ஓட்டுநர் கோபியை ஒரு மணி நேரம் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர. மேலும் விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழுதடைந்த வேன் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மாணவர்களுக்கான ஆன்லைன் பெட்டிகள:

Published

on

மாணவர்களுக்கான ஆன்லைன் பெட்டிகள்: மதுரை மாநகராட்சி ஏற்பாடு:

மதுரை:

மதுரை மாநகராட்சி
கொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் போட்டிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டர்ஸ் இணைந்து விஷால் டி மகாலில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், இன்று (05.08.2021) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், விழிப்புணர்வு பிரச்சாரத்தை 31.07.2021 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, 01.08.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல், குறும்பட போட்டிகள், ஓவியப் போட்டிகள், விழிப்புணர்வு வாசகப்போட்டி, மீம்ஸ் போட்டி, கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்;டு வருகிறது.
அதன்படி, மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டர்ஸ் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்பட போட்டி ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவானது
விஷால் டி மகாலில், நடைபெற்றது.
இந்த குறும்படத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், வருமுன் காப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து சிறந்த காட்சிகள் ஏற்படுத்திய குறும்படங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு சிறந்த குறும்படத்திற்கான முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வழங்கினார்கள்.
கொரோனா விழிப்புணர்வு வாரவிழாவின் தொடர்ச்சியாக, இன்று (05.08.2021) ரோட்டரி கல்யாண மகாலில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் மற்றும் வாசக போட்டிகள் ஆன்லைன் மூலம் ஆணையாளர்,
துவக்கி வைத்து பார்வையிட்டார். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓவியம் மற்றும் வாசகங்களை ஏற்படுத்தும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கல்வி அலுவலர்
பொ.விஜயா, நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், விஷன் கிரியேட்டர்ஸ் நிறுவனர்
பிரியதர்ஷினி, மேலாண்மை இயக்குநர்
பீமராஜ், ரோட்டரி கிளப் நிறுவனத் தலைவர்கள்
ஆர்.ஜெயக்கண்,
அந்தோணி பிரேம்குமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பேரம ்?

Published

on

மதுரை விளாச்சேரியில் நெல் கொள்முதல் செய்ய அதிக பணம் கேட்கும் அவலம் ; விவசாயிகள் வேதனை:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கவிற்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகள் 350ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். விளாச்சேரியில் உள்ள மந்தையில் சேகரிக்கும் அப்பகுதியில் விளையும் நெல்பயிர்களை அரசு கொள்முதல் செய்கிறது.!

இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணத்தை தவிர்ப்பதற்காக., அரசே நெல்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று அரசே நேரடி கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.! இந்நிலையில்., நெல் மூடைகளை கொள்முதல் செய்ய வரும் சரக்கு வாகனங்களுக்கு வழக்கமாக மூடை ஒன்றுக்கு ரூ. 50 என இடைத்தரகர்களிடம் விவசாயிகள் கொடுத்து வந்துள்ளனர். இதனடிப்படையில்., அரசு நேரடி கொள்முதல் செய்வதால் சரக்கு வாகனங்களுக்கு கொடுக்கும் படி பணம் தர தேவையில்லை என மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகளுக்கு., அரசாங்கமே மூடை ஒன்றுக்கு ரூ.50 கேட்டு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.! அரசு நேரடி கொள்முதல் செய்வதனால் இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணத்தை தவிர்க்கலாம் என நினைத்த விவசாயிகளுக்கு அரசே பணத்தை கேட்பது நியாயமற்றது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்..!

*இதுக்குறித்து., அப்பகுதி விவசாயி கூறியதாவது*

இடைத்தரகர்கள் இடையிலான பிரச்சனையில்., அரசே நேரடி கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்., அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முன்வந்த நிலையில்., இடைத்தரகர்கள் மூடை ஒன்றை கொண்டு செல்வதற்கு கேட்ட ரூ.50 பணத்தை அரசே கேட்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய விவசாயி., இந்த விவகாரதில் அரசாங்கம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்..!!

Continue Reading

LatestNews

அலங்காநல்லூர் அருகே கொரோனா விழிப்புணர்வ ு:

Published

on

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ,முடுவார்பட்டி ஊராட்சியில், கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பணிகள் – கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பிரேமா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் , தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக, அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை துறை உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகள் பதிவு முகாம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

செம வாய்ப்பு.. பழைய மொபைலுக்கு புதுசு!

ஒரிஜினல் விலை ரூ.48,000. ஆனால் எக்சேஞ்ச் ஆஃபரில் 39,999 ரூபாய்க்கு இந்த போனை நீங்கள் வாங்கலாம் செம வாய்ப்பு.. பழைய மொபைலுக்கு புதுசு! முதலில் தினசரி தமிழ்… [...]

பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குங்கய்யா..: கெஞ்சும் தென்மாவட்ட மக்கள்!

பாசஞ்சர் ரயில்சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குங்கய்யா..: கெஞ்சும் தென்மாவட்ட மக்கள்! முதலில் தினசரி தமிழ்… [...]

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3,  Z ஃப்ளிப் 3 விலை!

சாம்சங் மடிக்கக்கூடிய தொலைபேசிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3, Z ஃப்ளிப் 3 விலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

அநியாயம் அக்கிரமம் அரபி கற்பிக்க வந்தவர்.. சிறுமியை அடைத்து வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை!

டாக்கா ட்ரிபியூன் ஊடகத்தின் அறிக்கையின்படி, பங்களாதேஷின் சிட்டகாங்கில் 14 வயது மதரஸா மாணவியை, இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 50… [...]

இன்ஃபினிக்ஸ் 5A ஸ்மார்ட் போன்! அட்டகாச ஸ்பெஷலுடன்..!

HDR மற்றும் பொக்கே உள்ளிட்ட பல்வேறு படப்பிடிப்பு மாதிரிகளுடன் வருகிறது. இன்ஃபினிக்ஸ் 5A ஸ்மார்ட் போன்! அட்டகாச ஸ்பெஷலுடன்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: