ரேசன் அரிசி பறிமுதல்..

இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரிசி ஆலையில் (ரைஸ்மில்லில்) 31டன் 100 கிலோ அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல். உணவு பொருள் பறக்கும் படை தாசில்தார் மற்றும் ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் நடத்தி வரும் தனியார் அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் உணவுபொருள் பறக்கும் படை தாசில்தார் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று நடத்திய அதிரடி சோதனையில் அரிசி ஆலையில் சட்டவிரோதமாக 31டன் 100 கிலோ அளவிலான ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதனை கைப்பற்றிய அதிகாரிகள் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி எவ்வாறு வந்தது? இதற்கு பிண்ணனி தொடர்பாளர்கள் யார்? என அரிசி ஆலையை நடத்தி வரும் இன்பராஜ் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: