சாலை விபத்தில் திருநங்கை பலி

ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் திருநங்கை பலி….

தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த திருநங்கைகள் தாரணி (22), ஹன்சிகா (25). இருவரும் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். ராஜபாளையம் அருகே கொல்லங்கொண்டான் விலக்கு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக தடுமாறி அருகே சென்று கொண்டிருந்த டிராக்டர் வண்டியின் சக்கரத்தில் சிக்கி திருநங்கைகள் இருவரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த தாரணி சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக இறந்தார். ஹன்சிகாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார், டிராக்டர் ஓட்டுனர் கனகராஜ் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: