ராகு..கேது பெயர்ச்சி விழா…

ராகு கேது பெயர்ச்சி விழா சோழவந்தான் செப்டம்பர் 2 சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது இவ்விழாவை முன்னிட்டு ராகு கேதுக்கு பால் தயிர் பன்னீர் உள்பட 12 அபிஷேகங்கள் நடைபெற்றது சிறப்பு அலங்காரம் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று அர்ச்சகர் செந்தில் பூஜை செய்தார் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர் இதேபோல் சோழவந்தான் பிரளய நாத சுவாமி கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது துரோபதி அம்மன் கோவிலில் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இயக்கங்களிலும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது பக்தர்கள் சமூக இடைவெளி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: