அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

மேலூர் அருகே களத்தி அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

மதுரை

மதுரை மாவட்டம், மேலூர் அருகே க. கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு களத்தி அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் முன்பாக அமைந்துள்ள யாகசாலையில், வேதியர்களால், கடஸ்தாபனம், பிரவேசபலி, வேதி அர்ச்சணைகள், முதற்கால யாகவேள்விகள், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து , நாடி சந்தானம், யாத்ரா தானம், இரண்டாம் கால யாகபூஜைகளும், குடங்கள் புறப்பட்டு வந்து ஆலய கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதணை, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: