கிராமப்புறங்களில் பணிபுரிய இளைஞர்கள் வி ருப்பம்…அமைச்சர்

*கிராமப்புறங்களில் பணியாற்றவே இளைஞர்கள் விருப்பம் கணக்கெடுப்பில் தகவல்- அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்து காணொளி கலந்தாய்வு நடைபெற்றது,

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்,

அமைச்சர்
ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் இருந்து காணொளி மூலம் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்,

பின்பு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

கிராமப்புற இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது,

கிராமத்தில் செயற்கைக்கோள் அலுவலகம் மூலம் புதுப்பித்தல் கோட்பாட்டை அங்கமாகத் திகழும்,

கிராமத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்,

மார்ச் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தியதில் இளைஞர்கள் கிராமப்புறங்களில் சொந்த ஊரிலிருந்து பணிபுரிய விரும்புவது தெரிய வந்துள்ளது,

ஏற்கனவே இருக்கும் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து அதனை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ,தொற்று பரவாமல் தடுக்கும் வண்ணம் குளிர்சாதன வசதி இன்றி சமூக இடைவெளி பாதுகாப்புடன் அவர்கள் பாதுகாப்புடன் பணியாற்ற உறுதி அளித்துள்ளனர்,

மென்பொருள் உருவாக்குவதற்கு பெரும்பாலான கணினி பொறியாளர்கள் கிராமத்திலிருந்து நகரத்தை நாடுகின்றனர், இதனால்தான் தற்போது கிராமப்புறங்களில் தேடி தகவல் தொழில்நுட்பங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம்,

புதிய முயற்சியாக கிராமங்களிலிருந்து ஊழியர்கள் பணிபுரிய 12524 கிராமங்களில் இன்டர்நெட் சேவையை வழங்கி அதன் மூலம் கேபிள் டிவி சாட்டிலைட் போன் அனைத்து வசதிகளையும் கொண்டுவர பணிகளை தற்போது துவங்கியுள்ளது,

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இதனை செயல்படுத தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை முயற்சி எடுத்து வருகிறது

முன்மாதிரியாக சோதனை ஓட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது

அதிக சம்பளத்துடன் கிராமப்புற இளைஞர்கள் வாய்ப்புகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்

உலகளாவிய போட்டியை சந்திக்க நாம் தகவல் தொழில்நுட்பத்தில் கிராமப்புறங்களிலிருந்து சந்திக்க தயாராக இருக்கிறோம்

இது போன்ற முயற்சிகளுக்கு தமிழக அரசு எப்போதும் வரவேற்க காத்திருக்கிறது,

தமிழகத்திலே ஐடி துறையில் தென்தமிழகத்தில் பிறந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்கள் என்று கூறினார்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: