கிராமங்களில் கனிமவளம் கொள்ளை..

அலங்காநல்லூர் வட்டாரத்தில் பல கிராமங்களில் இரவு நேரங்களில் கனிமவளம் கொள்ளை

பா.ம.க. ஆட்சியரிடம் புகார்:

மதுரை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் பல கிராமங்களில் இரவு நேரங்களில் லாரி மற்றும் டிராக்டர்களில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதாக, பாமக மாவட்ட நிர்வாகி இரா. அழகுராஜா, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாதாவது:
அலங்காநல்லூர் அருகேயுள்ள அழகாபுரி, இடையபட்டி, மீனாட்சிபுரம், அய்யூர், கோவில்பட்டி, பாலமேடு, கொழிஞ்சிபட்டி, ஆதனூர், முடுவார்பட்டி, வெள்ளையம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பட்டாநிலங்களில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, இரவு நேரத்தில் மணல் மற்றும் செங்கல்சூளை மணல் ஆகியவை லாரி மற்றும் டிராக்டரில் தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆறு அடி வரை தோண்டப்படுவதால், கிராமங்களில் நிலத்தடி நீர் குறையவும் வாய்ப்புள்ளதாகவும், ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: