Connect with us

LatestNews

கல்குவாரியில் முழ்கி மாணவன் சாவு..

Published

on

*திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற +2 மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு* .

*தீயணைப்புத் துறையினர் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவனின் உடல் சடலமாக மீட்பு*

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பயன்பாடற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஐந்து மணிநேரமாக தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் பகுதியில் சௌந்தர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது என கடந்த சில வருடங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது . இதனால் மழை நீர் தேங்கி கிடக்கும் கிடங்காக மாறியதால் விடுமுறை காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பது வழக்கம். இந்நிலையில் திருமங்கலம் சோழவந்தான் சாலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி விமலா தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகேஷ்(16) இவன் திருமங்கலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சௌந்தர் கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளான். குளிக்கும்போது ஆழமான பகுதி சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளான். நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்து முடியாததால் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினான். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மதுரை திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி அவர்களின் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கல்குவாரியில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர் 5 மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் இருள் சூழ்ந்த காரணத்தினால் மறுநாள் காலை அதாவது இன்று தேடலாம் என காலை 6 மணி முதல் தேடத் தொடங்கினர். சிறுவனின் உடல் தொடர்ந்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் இந்தநிலையில் இன்று மதியம் 2 30 மணி சிறுவனின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்ட திருமங்கலம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

விழிப்புணர்வு பேரணி

Published

on

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Continue Reading

LatestNews

மாடு முட்டி ஒருவர் பலி

Published

on

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:

மதுரை

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

LatestNews

பத்திரிக்கையாளர் தாக்கு.

Published

on

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

5000 கி.மீ தூரத்தை பைக்கிலேயே அசாதாரணமாய் கடந்து அசத்திய அஜித்!

பைக் ரைட்-ன் நடுவே காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார் அஜித். 5000 கி.மீ தூரத்தை பைக்கிலேயே அசாதாரணமாய் கடந்து அசத்திய அஜித்!… [...]

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

வீடு தேடி வரும் பணம்: வங்கிகள் வழங்கும் சேவை!

தங்களது வீட்டிலிருந்தபடியே பண பரிவர்த்தனை உட்பட பிற வங்கி சேவைகளையும் எளிதாக பெற முடியும். வீடு தேடி வரும் பணம்: வங்கிகள் வழங்கும் சேவை! முதலில் தினசரி… [...]

ராஜினாமா செய்துட்டு எந்தக் கட்சியிலன்னாலும் போய் சேர்ந்துக்குங்க: ரஜினி மக்கள் மன்றம்!

ரஜினி மக்கள் மன்றத்தினர் தாங்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சியிலும் போய்ச் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ராஜினாமா செய்துட்டு எந்தக் கட்சியிலன்னாலும் போய்… [...]

தெலங்காணாவில் தடுப்பூசி திட்டம்: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

நிம்ஸ் மருத்துவமனையில் வாக்சினேஷன் - தடுப்பு மருந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கவர்னர் தமிழிசை. தெலங்காணாவில் தடுப்பூசி திட்டம்: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்! முதலில்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: