அதிமுக நகர செயலர் கொரோனவால் இறப்பு…

சிவகங்கை நகர
அ.தி.மு.க. செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

சிவகங்கை:

சிவகங்கை நகர் செயலாளர் ஆனந்தன் கொரானா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஒரு மனைவி இரு மகன்கள் உள்ளனர். ஆனந்தன் சிவகங்கை மாவட்டம் பாம்கோ நிர்வாக குழு உறுப்பினராகவும், சிவகங்கை கூட்டுறவு பண்டகசாலை தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், கடந்த இரு நாட்களாக கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிமுக முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: