மூவர் தற்கொலை முயற்சி..

மதுரை :

சேட பட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி, ஒரு பெண் பலி, இருவருக்கு தீவிர சிகிச்சை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் சேடபட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது மனைவி செல்லம்மாள், தாய் செல்லம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் மூவரும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததில் தாய் செல்லம்மாள் உயிரிழப்பு, மேலும் ராமர் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் தீவிர சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இரவு 10 மணியளவில் வீட்டில் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலான நிலையில் முதற்கட்டமாக சிலிண்டர் மூலமும் இரண்டாம் கட்டமாக அரளி விதையை உண்டும் தற்கொலைக்கு முயன்றனரா என சேடபட்டி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: