உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட ்டம்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு
நிறுவனங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதது.:

மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி தகவல்:

புதுக்கோட்டை. ஆக.30,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி
தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம்”; 2020-2021ஆம் ஆண்டு முதல் 2024-2025
வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்
மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி
பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை
வாயிலாக தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்
வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில்
மாவட்ட
ஆட்சித்தலைவர்
தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.
உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம்
தனிநபர் அடிப்படையில்ää ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில்
ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய
நிறுவனங்கள் தொடங்குதல்ää குழு அடிப்படையில் பொது உட்டகட்டமைப்பு
வசதிகள் ஏற்படுத்தி தருதல்,
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல்,

தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும்,
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
சுய உதவி குழுக்கள் மற்றும்
கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம்
தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிக பட்சமாக
ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும்
சந்தைப்படுத்துதலுக்கு ரூ.50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
மேலும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும்
தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அடிப்படையில்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முந்திரி விளை
பொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆகவே மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கி வரும் சிறு உணவு
பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கென
தேர்ந்தெடுக்கப்பட்ட முந்திரி விளைபொருளை பதப்படுத்தும் தொழிலில்
ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை வணிக
துணை இயக்குநரின் 94422 75726 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: