Connect with us

LatestNews

தமிழகத்தில் பாஜக வளரவேண்டும்..அமைச்சர்

Published

on

பாஜக டெல்லிக்கு ராஜானாலும் தமிழகத்தில் தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் – செல்லூர் ராஜூ பேட்டி

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் :

இந்தியாவிலயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துகொடுத்துள்ளோம் , ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் எனவும் ஊரடங்கு குறித்த நல்ல செய்தியை அறிவிப்பார் ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார், ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது, பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது, தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ஹெச்.ராஜா எதாவது பேசிகொண்டே இருப்பார் , பாஜக டெல்லிக்கு ராஜாவாக தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் , மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் என்றார். மேலும் திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும் என்பது தான் நிலை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜயை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள், விஜய் தமிழர் நல்ல நடிகர் அவ்வளவுதான், அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், அம்மா மீது ஈர்ப்பு உள்ளதை காட்டுகிறது எனவும், நீட் விவகாரம் குறித்த ஸ்டாலினின் அறிக்கை குறித்த கேள்விக்கு : இலங்கை தமிழர்கள் மற்றும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை:

Published

on

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மதுரை அதிமுக மாணவரணி சார்பில் தமுக்கம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அருகில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் ராஜா மாணவரணி செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான மாணவர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Continue Reading

LatestNews

உதயநிதிக்கு நிர்வாகம் பற்றி தெரியாது…அம ைச்சர்

Published

on

*உதயநிதி ஸ்டாலின்*
*நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்*
*அவருக்கு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாது*

*மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*.

மதுரை :

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர், மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

அதன் பின் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உதயநிதி ஸ்டாலின் ஊழல் குறித்து பேசலாமா? உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும்,தந்தையும் ஊழலில் திளைத்தவர்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகத்தை பற்றி ஒன்றும் தெரியாது.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் சேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மக்கள் தான் எஜமானார்கள். மக்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரைஒரே முடிவாகத்தான் இருக்கும்.

சென்னையிலேயே ஸ்டாலின் ஏன் சுற்றிக்கொண்டுள்ளார். மதுரைக்கும் வர சொல்லுங்கள்.

அதிமுக நிற்கும் இடங்களில் திமுக நிற்கும் என கூறியுள்ள நிலையில் ஸ்டாலினே நின்றாலும் மக்கள் அவரை தோற்கடிக்க தயாராகி விட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவினை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முதல்வர், மற்றும்துணை முதல்வர் ஆகியோரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் முடிவடுத்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Continue Reading

LatestNews

இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி…

Published

on

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி:

கிராம மக்கள் வியப்பு

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு நேற்று ஆட்டுகுட்டிபோட்டது அது இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

குடியரசு தின விழா: விமானப்படையை வழி நடத்தும் முதல் பெண்மணி!

அதிவேக விமானப்படை அணிவகுப்பை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை, இந்திய விமானப்படையின் லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் விரைவில் படைக்கவுள்ளார். குடியரசு தின விழா: விமானப்படையை… [...]

பிரதமருக்கு குடியரசு தின பரிசு! துபாயில் உள்ள கேரள மாணவனின் அசத்தல் ஓவியம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு, துபாயில் வசித்து வரும் 14 வயது இந்திய மாணவா், பிரதமா் நரேந்திர மோடிக்கு அவரது ஓவியத்தை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளாா். கேரளத்தைச் சோந்த… [...]

தைப்பூசத்தை முன்னிட்டு இராமநாதசுவாமி கோவில் நிகழ்ச்சிகள்!

3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு இராமநாதசுவாமி கோவில் நிகழ்ச்சிகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

தெரியாமல் லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் தகவல் திருட்டு மற்றும் பண மோசடிகள் நடைபெறும் அபாயம் உள்ளது. வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை! முதலில் தினசரி… [...]

அரசு வேலை:  ஊதியம் மாதம் ரூ.35,900 – 1,13,500 வரை!

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு வேலை: ஊதியம் மாதம் ரூ.35,900 – 1,13,500 வரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: