தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டுறவு நாணய ச் சங்க தொடக்கவிழா…

மதுரையில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஓளிப்பதிவாளர்கள் கூட்டுறவு நாணயச் சங்க தொடக்க விழா:

மதுரை

மதுரையில் முதன்முதலாக, தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஓளிப்பதிவாளர்கள் கூட்டுறவு நாணயச் சங்க தொடக்கவிழாவானது சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.
தொலைக்காட்சி செய்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜெகநாதன் வரவேற்றார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, சங்கத்தை தொடங்கிவைத்து, கூட்டுறவு சங்கங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி எடுத்துரைத்தார்.
தொலைக்காட்சி செய்தியாளர் சங்க பொதுச் செயலர் கே. காசிலிங்கம், தொடக்கவுரை நிகழ்த்தினார்.
மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ராஜேஸ், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மேலாண்மை இயக்குநர் ஜூவா, மதுரை தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சி செய்தியாளர் சங்க பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: