குவாரியிலிருந்து காபாற்றப்பட்ட பெண்..

மதுரை அருகே கல்குவாரியில் தவறி விழுந்த பெண்ணை காபாற்றிய தீயணைப்புத்துறையினர்

மதுரை

மதுரை மாவட்டம், கீழவளைவு கிராமத்தில் பி.ஆர்.பி. கல்குவாரியில் உள்ள பள்ளத்தில் தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.
கீழவளைவு கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தனசேகரன் மனைவி மகாலட்சுமி தவறி விழுந்து விட்டதாக, மேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து மேலூர் தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரும்பு ஏணி மூலம் கல்குவாரி பள்ளத்தில் இறங்கி, 200 அடிக்கு தண்ணீரில் நீந்தி சென்று மகாலட்சுமியை காப்பாற்றி, அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: