தவசிலிங்கசுவாமி ஆலய குடமுழுக்கு..

ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலில் இன்று மஹாகும்பாபிஷேக விழா
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
விருதுநகர் . ஆக. 28; விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ வழிபாட்டு கோயிலான இந்த கோயிலில் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. சுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு கோயில் திருப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டார். சுமார் 500 வருடங்களுக்கு முன் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோயில் அதன் பழமை மாறாமல் ஆகம விதிப்படி மீண்டும் புதிதாக திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டது கோயிலில் புதிதாக மூலஸ்தானம் அர்த்தமண்டபம் கல் திருப்பணி வேலைகள் மூலஸ்தான விமானம் மூன்று நிலை கோபுரம் மஹா மண்டபம் நுழைவு வாயில் மூன்று நிலை ராஜகோபுரம், அய்யனார் குதிரை வாகனம் கல் திருப்பணி வேலைகள் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மூலஸ்தான விமானம், கல் சிலைகள் பிரதோஷந்தி யானை வாகனம், திருமதில் சுவர் தலைவரிசைகல் தரைதளம் உள்பட திருக்கோவில் முழுவதுமான புதிய திருப்பணி வேலைகள் அனைத்தும் தவசிலிங்கம்-கிருஷ்ணம்மாள் மகன் விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை காலை மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை முதல்யாக கால பூஜை நடைபெற்றது. பூஜையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார். நேற்று காலை மங்கள இசையுடன் இரண்டாம்கால யாகபூஜை நடைபெற்றது. ஸ்ரீ தவசிலிங்க சுவாமி, ஸ்ரீஐயனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு மூன்றாம் காலயாக பூஜை நடைபெற்றது. 3ம் யாககால பூஜையிலும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட காலக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மங்கல்ராமசுப்பிரமணியன், சார்பு ஆட்சியாளர் தினேஷ் குமார், சிவகாசி ஒன்றியக் கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, மதுரை ஏர்போர்ட் அத்தாரட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகவிழா இன்று காலை நான்கு மணிக்கு மங்கள இசையுடன் 4ம் யாககால பூஜைகள் நடைபெற்றது. திரவ்யாஹூதி, ஸ்பரிசாஹூதி, பூர்ணஹூ தீபாதாரதனை, யாத்ராதானம் அதனை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்றுகாலை 7.15 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீ தவசிலிங்க சுவாமி, ஸ்ரீஅய்யனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஆலய விமான கலசத்திற்கு பொதுதீட்சிதர்கள் கும்பநீரை ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தவசிலிங்க சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாதாரதனை நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பாக அமைச்சருக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு தீபாராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். மஹா கும்பாபிஷேக விழாவில் சிற்பி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, மூளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதிராஜா, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய்ஆனந்த் திருத்தங்கல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராசா, விருதுநகர் தொழில் அதிபர் முரளிதரன், மதுரை ஏர்போர்ட் உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் தொழில் அதிபர் கோகுல்தங்கராஜ், ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் நேதாஜி சுபாஷ் பேரவை மகாராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சீனிவாசன், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளா் கே.டி.சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தெய்வம், சிவகாசி 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், மங்களம் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், திருதங்கல் நகர மீணவரணி செயலாளர் பாலகணேஷ், ஒன்றிய கழக துணை செயலாளார் கவிதாகருப்பசாமி, சிவகாசி நகர அம்மா பேரவை செயலாளார் கருப்பசாமி பாண்டியன். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம், சாஸ்தா காளிராஜன், திருத்தங்கல் நகர விவசாய அணி செயலாளர் சிவனேசன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் சிவகாசி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனுஷ், சிவகாசி ஒன்றிய மாணவரணி செயலாளர் தெய்வம், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் மச்சேஸ்வரன், மாவட்ட கழக பொருளாளர் தேவர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம், சிறப்பு யாக பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்==================================================================

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: