போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் அப்ப ுறபடுத்தப்படுமா?

மதுரை அருகே கருப்பாயூரணியில் சாலை ஒரமாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீஸார் கட்டுபடுத்துவார்களா?

மதுரை

மதுரை அருகே கருப்பாயூரணியில் சாலையின் இருபுறங்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகளும், வாகனத்தில் செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுரையிலிருந்து..சிவகங்கைக்கு செல்லும் வாகனங்களும் சிக்கி தவிக்கின்ற நிலையானது, கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளி அருகே அடிக்கடி ஏற்படுகிறது.
மேலும், இப்பகுதியில் அரசு சிட்டி பஸ்கள் போல செயல்படும் ஆட்டோக்களும், சாலையின் நடுவே திடீரென நிறுத்தி, ஆட்களை போட்டி போட்டுக் கொண்டு ஏற்றுவதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இது குறித்து கருப்பாயூரணி காவல் அதிகாரிகளின் பார்வைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கருப்பாயூரணி பகுதியில் மாலை நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் வருவோரை பாய்ந்து பிடிக்கும் ஆர்வம் காட்ட போலீஸார், சாலையின் இருபுறங்களில் நிறுத்தும் வாகனத்தையும், காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: