மாணவர்களுக்கு விலையில்லா செல்பேசி….

*மதுரையில் பள்ளியில் சேரும் 6-ஆம் வகுப்பு மாணவருக்கு விலையில்லா செல்பேசி – அரசு உதவி பெறும் பள்ளியின் அசத்தல் விளம்பரம்..!!!*

மதுரை வசந்தநகர் அருகே உள்ளது தியாகராசர் மேல்நிலைப்பள்ளி,மிகப் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி தனியார் நிர்வாகமென்றாலும், அரசின் உதவிகளைப் பெற்று கல்விச் சேவையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது,இந்நிலையில், கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பல்வேறு பள்ளி நிர்வாகங்கள் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன,அதுமட்டுமன்றி, தற்போது மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மாணவர்களை ஈர்க்க பல்வேறு வகையிலும் உத்திகளைக் கையாண்டு வருகின்றது,அதன் ஒரு பகுதியாக மதுரையில் தங்களது பள்ளியில் 6-ஆம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக விலையில்லா ஆண்ட்ராய்டு செல்பேசிகள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்திய சம்பவம் மதுரையில் உள்ள பொற்றோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: