வைகையில் ஆகாயதாமரை அகற்றும் பணி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வைகை ஆற்றில் ஆக்கிரமித்து காணப்படும் ஆகாய தாமரையை அகற்றும் பணிகள் தீவுரமாக நடைபெற்று வருகிறது

வடகிழக்கு பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வைகை ஆற்றில் ஆக்கிரமித்து காணப்படும் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வைகை ஆற்றின் ஓபுளா படித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் முதல்கட்டமாக 4 பொக்லைன் இயந்திரம் மற்றும் 20 பணியாளர்களை கொண்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போது வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையிலும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் ஆகாய தாமரை படடந்துள்ளதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: