கழிவுநீர் பாதை மூடல்..தொற்று பரவும் அபாய ம்…

சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் கழிவுநீர் பாதையை மூடியதால் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் ஆக்கிரமிப்பாளர்கள் சாக்கடையை மூடியதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் புகுந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் புகார் .விரைந்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி உள்ளது. பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் அருகே உள்ளது இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நான்கு வீதிகள் உள்ள இந்த காலணியில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் சாக்கடையை மூடியதால் கழிவுநீர் வீதிகளில் புகுந்து சிலர் வீடுகளில் புகுந்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் வீடுகள் முழுவதும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள கோவிலருகே முழுவதுமாக சாக்கடை நீர் நிரம்பி உள்ளது. பள்ளிகள் விடுமுறை விட்டதால் குழந்தைகள் சாக்கடை நீரில் விளையாடி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் டெங்கு ,மலேரியா டைபாய்டு, போன்ற வேறு ஏதேனும் நோய் பரவ வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் யூனியன் நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை .எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடையை முழுவதுமாக தோண்டி சுத்தம் செய்து இப்பகுதி சுகாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: