குடிமராமத்துபணி விரைந்து முடிக்க அமைச்ச ர் உத்தரவு…

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு:

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை வட்டம்
வெள்ளிக்குறிச்சி,
மாரநாடு,
புலவர்சேரி ஆகிய ஊராட்சிகளில் ரூ.172 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணியினை
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்
ஜி.பாஸ்கரன்
துவக்கி வைத்து,
பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜெ.ஜெயகாந்தன்
தலைமை வகித்தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.நாகராஜன்
முன்னிலை வகித்தார்.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்
.ஜி.பாஸ்கரன்
தமிழக முதலமைச்சர்
குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது,
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வெள்ளிக்குறிச்சி ஊராட்சியில் ஊரணி வரத்துக்கால்வாய் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுவதற்கான பணியினை துவக்கி வைத்தார்.

பின்னர்,
வெள்ளிக்குறிச்சி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு இப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் உள்ளதால் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் கட்டடம் கட்டித்தர பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக
தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து,
பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துத் திட்டப்பணியின் கீழ்
புலவர்சேரி ஊராட்சியில் புலவர்சேரி கண்மாய் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் இக்கண்மாயில் ஆயக்கட்டுப்பகுதி முழுவதும் பயன்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்வதுடன் மடைகள் மற்றும் கழுங்கு ஆகியவற்றை புதுப்பித்துடவும் அறிவுறுத்தினார்.
அதனையடுத்து,

மாரநாடு ஊராட்சியில் மாரநாட்டு பெரியகண்மாய் ரூ.97 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் மடைகள்,
கழுங்கு கட்டும் பணி நடைபெற்றததையும் பார்வையிட்டதுடன், இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு சுமார் 2883.06 ஏக்கர் பரப்பளவு உள்ள விளைநிலங்கள் நிறைந்த பகுதியென்பதால்,
அதற்கேற்ப இந்தக்கண்மாயின் பரப்பளவும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் பல நூற்றாண்டு கால சிறப்பு வாய்ந்த கண்மாய்களில் இதுவும் ஒன்றாகும்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ,
தமிழ்நாடு முதலமைச்சர்
குடிமராமத்துத் திட்டத்தில் பணி துவக்க உத்தரவிட்டு இப்பணி முடியும் நிலையில் உள்ளது.
விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் கண்மாயை நன்றாகப் பராமரித்து பாதுகாப்பது உங்கள் பங்கு இருந்தால்தான் சரியாக பாதுகாக்க முடியும். அந்தவகையில் ஒவ்வொரு விவசாயியும் கண்மாயை பாதுகாப்பதில் கருத்தில் கொண்டு குடிமராமத்துப் பணியை நன்றாக மேற்கொள்வதுடன் தேவையான பாசனமடைகள் புதிதாக கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கழுங்கு சீரமைக்கும் பணி மேற்கொள்வதையும் அலுவலர்களுக்கு
பணியாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியை நல்லமுறையில் முடிப்பதுடன் இந்தக்கண்மாய்க்கும் வரும் வரத்துக்கால்வாயும் சீர்செய்திட வேண்டும்., அப்பொழுதுதான் வரும் மழைக்காலத்தில் தண்ணீர் சேதாமின்றி முழுக்கொள்ளளவும் கண்மாயில் வந்தடையும். அதன்மூலம் அனைத்து விவசாயிகள் பயன்பெறுவது மட்டுமன்றி நிலத்தடி நீர்மட்டமும் உயருவதற்கு குடிமராமத்து திட்டம் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் இத்திட்டத்தை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ,பொதுப்பணித்துறை சருகனியாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர்
சொர்ணக்குமார்,
உதவி செயற்பொறியாளர்
மலர்விழி,
உதவிப்பொறியாளர்கள்
சுரேஷ்குமார்,
அமுதா,
சமூக ஆர்வலர்
பாலசுப்பிரமணியன்
கூட்டுறவு வங்கி இயக்குநர்கள்
சசிக்குமார்,
ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: