பண்ணை பள்ளி பயிற்சி முகாம்

சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சி முகாம்:

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில், வட்டார வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில் ராஜா என்பவரது வயலில், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை
மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமுக்கு, வட்டார தொழில் நுட்பக்குழு அமைப்பாளர் எஸ்.வாசுகி தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் முனைவர் உஷாராணி, நெற்பயிரில் விதை நேர்த்தி, பயிர் மேலாண்மை, பூச்சிநோய் மேலாண்மை மற்றும் உரக்கட்டுபாடு குறித்து பயிற்சி அளித்தார்.
இதற்கான ஏற்பாட்டை, வேளாண் தொழில் நுட்ப திட்டப் பணியாளர்கள் பாலமுருகன், வேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: