பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி..

அலங்காநல்லூர் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து செயினை பறிக்க முயற்சி

விவசாயத் தொழிலாளர்கள் விரட்டி பிடித்து போலிஸுல் ஒப்படைப்பு

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கட்டிட வேலைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்ற முயற்சியானது, அக்கம் பக்கத்தினரால் முறியடிக்கப்பட்டது.
இது பற்றி கூறப்படுதாவது:
அலங்காநல்லூர் அருகே மணியஞ்சி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விஜயா..வயது 45. கட்டிடத் தொழிலாளியான இவர், குலமங்கலம் ரோட்டில், வேலைக்காக சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர், விஜயா முகத்தில் மயக்க மருந்தை தெளித்து கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டராம்.
அப்போது அக்கம் பக்கத்தில் வயல்களில் வேலை பார்த்தவர்கள் வேகமாக ஓடி வந்தனராம்.
இதைப் பார்த்த மர்ம நபர் செயினை விட்டு, விட்டு வாகனத்தில் தப்பிக்க முயன்றாராம்.
உடனே, தொழிலாளர்கள் அவரை விரட்டி பிடித்து அலங்காநல்லூர் போலிஸீல் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸார் விசாரித்ததில், மர்ம நபரானவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் வயது. 41 எனத் தெரியவந்தது.
அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: