குப்பையை கொட்டி போராட்டம்

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் குப்பைகளை அகற்றாமல் சுகாதாரக்கேடு இதைக் கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு இடையே வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் அதிக அளவில் மருத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய பேண்டேஜ் உற்பத்தி நடந்து வருகிறது இந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடமில்லாமல் குப்பைகள் தெருக்களில் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் தகவல் அரிந்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார்

இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது அனைத்து கட்சி கூட்டத்தில் கீழராஜகுலராமன் பஞ்சாயத்து, சமுசிகாபுரம் பஞ்சாயத்து, சத்திரப்பட்டி பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டனர் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட போது பஞ்சாயத்து தலைவியாக இருக்கக் கூடியவர் கலந்துகொள்ளாமல் அவருடைய கணவர் கலந்துகொண்டு கேள்வி எழுப்பியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது

இதையடுத்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக குப்பை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார் அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: