நூதனப் போராட்டம்

வாடிப்பட்டி அருகே
நாற்றுநடும்
நூதனப்
போராட்டம்.

வாடிப்பட்டி ஆக. 27

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிப்பட்டி
ஊராட்சியில் 1,2வதுவார்டுகளுக்குட்பட்ட மந்தைக்குளம் தெருவில்
பலஆண்டுகளாக குட்லாடம்பட்டி அருவிக்கு செல்லும் சாலையில்
இருபுறத்தி;லும் வடிகால் இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும்
கழிவுநீரும், மழைதண்ணீரும் சேர்ந்து சாலையில் தேங்குவதால் சாலை
குண்டும்குழியுமானது. அதனால் புதியசாலை அமைக்ககோரி பொதுமக்கள் விடுத்த
கோரிக்கையையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியசாலை அமைப்பதற்கு
ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது பழையசாலையின் கற்கள் பெயர்க்கப்பட்டது. ஆனால்
அதன்பின் பணி நடைபெறவில்லை தற்போது கடந்த 3 நாட்களாக தொடந்து மழைபெய்ய
தொடங்கியுள்ளதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் சேரும்
சகதியும் உருவாகி கொசுக்கள் உற்பத்திதொடங்கிவிட்டது. மேலும்
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் இதில் கலப்பதால் துர்நாற்றம்
வீசுகிறது. எனவே போர்காலஅடிப்படையில் சாலைபணியை தொடங்ககோரியும் அதற்கு
முன் சாலையின் இருபுறத்திலும் வடிகால் கட்டிட வலியுறுத்தியும்
மறதமிழர்சேனை மாநிலதுணைப் பொது செயலாளர் ஆதிமுத்துகுமார் தலைமையில்
ஊராட்சிமன்றதுணைத்தலைவர் பஞ்சுகருப்புசாமி, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர்
சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் கிராமபொதுமக்கள் நூத
ன முறையில்
நாற்றுநடும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் இந்தபகுதியில்
பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: