வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்…பரபரப்பு

திருவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்….

திருவில்லிப்புத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில், வீட்டிற்குள் 10 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி செண்பகதோப்பு. இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியின் அடிவாரப்பகுதியில் மலை வாழ் மக்கள் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இன்று ஒரு வீட்டுக்குள் 10 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. இது குறித்து அந்தப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், வீட்டுக்குள் புகுந்த ராஜநாகத்தை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட ராஜநாகத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: