LatestNews
சிறார்கள் வன்முறையா?
சோழவந்தானில் தொடரும் சிறார்களின் வன்முறையா?
சோழவந்தான் ஆக25
சோழவந்தான் அய்யவார் தெரு கருவாயன் தோப்பு சனீஸ்வர பகவான் கோவில் மேல்நிலை நீர்த்தொட்டி அருகில் பேட்டை வைகையாற்று பகுதி மயான மேல்நிலை நீர்த்தொட்டி அருகே ஆகிய பகுதிகளில் சிறார்கள் கூடி மது அருந்தி கஞ்சா உட்பட போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் .இவர்கள் அப்பகுதியில் செல்லக்கூடிய அவர்களை கேலி கிண்டல் செய்து வீண்வம்பு செய்து வருகின்றனராம்.
இதனால், பலமுறை கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஜாதி சண்டை உருவாகும் அவல நிலை ஏற்பட்டு வருகிறதாம்.
அப்போது, காவல்துறை அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரதவீதி அய்யவார் தெரு அதுவரை இப்பகுதி உறவின்முறை சுமார் ஒரு லட்சம் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளனர். இதை காவல்துறை அவ்வப்போது கண்காணித்தால் நன்மை பயக்கும்.
அதிகாரிகள் உத்தரவின்பேரில் இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர் குற்றச் சம்பவங்களை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை சோழவந்தான் காவல் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே, இப் பகுதி மக்கள் ஆவலாகும்.
இதனால் ,இப்பகுதியில் தினசரி சிறார்கள் வன்முறை சம்பவங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தார் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததால், புகார் கொடுத்தவர்களை சிறார்கள் தாக்கி வருகின்றனர் .
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை எடுத்து சிறார்களின் சீரழியும் பாதையை தடுத்து இப்பகுதியில் அன்றாட நடைபெறக்கூடிய சின்னஞ்சிறு சம்பவங்களை தடுக்க வேண்டும் இதனால் பாதிக்கக்கூடிய மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சோழவந்தான் வளர்ச்சியில் பாடுபட்டு கொண்டிருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள் பலமுறை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் நேற்று மதியம் அய்யவார் தெருவில் சிறார்கள் மது அறிந்து கஞ்சா குடித்து அவ்வழியாகச் சென்ற கூடியவர்களை கெட்டவார்த்தையால் திட்டி வம்பு செய்து உள்ளனர் ஒரு சிலர் காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளனர் இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது சிறார்கள் தப்பி ஓடிவிட்டனர் சிறார்கள் முழுமையான அடையாளமும் பெயர்களும் காவல்துறைக்கு தெரியும் என்று இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர் நேற்று இரவு கொட்டகையை மாணிக்கம் என்பவருடைய வீட்டில் மர்ம நபர்கள் தீ வைத்தனர் அக்கம்பக்கத்தினர் எழுந்து தீயை அணைத்தனர் .
இதனால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சோழவந்தான் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து சென்றனர் இதுகுறித்து ,
மாணிக்கம்,
சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சீரழியும் சிறார்களை கட்டுப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்று மீண்டும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்
LatestNews
களைகட்டிய மாசி பொங்கல் விழா..

சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும். இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர். சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.