வெளி மாநில போர்வெல் லாரியை கட்டுபடுத்த வ ேண்டும்”

வெளிமாநிலை போர்வெல் லாரியை கட்டுப்படுத்த வேண்டி, ஆட்சியரிடம் மனு:

மதுரையில் மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர் ஏஜென்ட் சங்கம் கோரிக்கை

மதுரை

மதுரையில், வெளி மாநில போர்வெல் லாரிகளை பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர், அவருடைய மேலாளர் சரவணன் மூலமாக, மதுரை நகரில் தொடர்ந்து போர்வெல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், அரசு விதிகளை இவர்கள் முறையாக பின்பற்றப்படவில்லையெனவும், எதிர்பாரத விதமாக அசாம்பாவிதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் வேறு மாநிலத்துக்கு அலையும் நிலை ஏற்படுமாம்.
இது குறித்து போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் மனுக்கள் அளித்துள்ளதாக, மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர் ஏஜென்ட் சங்கத்தினர், தலைவர் பி. சுரேஷ்,
செயலர் ஆர்.ரவி, பொருளாளர் ஏ. மாரியப்பன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் முருகேசன், சிவபாலன் உள்ளிட்டோர் கையெழுத்து இட்டு மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: