பெண்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் நிறுவ னங்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்..

பெண்களை மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி, பெண்கள் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்:

மதுரை

மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனத்தினர், பெண்களை வட்டி கேட்டு மிரட்டுவதாக கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் புதன்கிழமை பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முத்துமாரி தலைமை வகித்தார்.
மகளிர்சுய உதவிக் குழுக்கள் மற்றும் மைக்ரோ நிறுவனத்தினரிடம் பெண்கள் பெற்ற கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், கடனை திருப்பி செலுத்த ஆறுமாத கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: