குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்..அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர்

புதுக்கோட்டை, ஆக. 25.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை
அதிகப்படியான
நபர்களுக்கு மருத்துவ
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாண்புமிகு மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்
தொடர்ந்து போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவில் கொரோனா
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
கொரோனா தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
மருத்துவ முகாம்கள்
நடத்தப்பட்டு
இதுவரை
பல ஆயிரம்
நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை,
இராணியார் அரசு மருத்துவமனை,
பழைய அரசு தலைமை மருத்துவமனை,
அறந்தாங்கி அரசு மருத்துவமனை,
இலுப்பூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு
இடங்கள் மற்றும் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோவிட் சித்த மருத்துவ பிரிவிலிலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிரமாக முகாம்கள் நடத்துவதன் மூலம், நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: