போலீஸாரை கண்டித்து பெண் மறியல்..

மதுரை
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் புகாரை வாங்க மறுத்த அவனியாபுரம் போலீசார் இதனால் மதுரை விமான நிலைய சாலையில் புகார் அளிக்க வந்த பெண் சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அழகு வள்ளி
(வயது 35 . ) இவருக்கு இவரது உறவினர்கள் பாலியல் தொல்லை தருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற போது
அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்து அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அழகு வள்ளி வில்லாபுரம் – விமான நிலைய மெயின் ரோட்டில் எம்.எம்.சி. காலனி. அருகே சுமார் அரைமணி நேரம் நடுரோட்டில் மறியல் செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம்
போலீசார் அங்கு வந்து சாலை மறியல் செய்த அழகு வள்ளியை குண்டு கட்டாக தூக்க முயன்ற போது போலீசாருக்கும் அந்த பெண் உறவினர்களுக்கும் மோதல் ஏற்பட்து.
பின்னர் அவனியாபுரம் போலீசார் அழகு வள்ளி உள்ளிட்ட 8 பேரை வேனில் ஏற்றி சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: