போர்வெல் திறப்பு விழா..

மதுரை போர்வெல்லை திறந்து நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ

மதுரை

மதுரை மத்திய தொகுதியில் போர்வெல்லை, பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து எம்எல்ஏ. பழனிவேல் தியாகராஜன் கூறியது:
இதுவரை, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக 32 போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது என்றும், சாலை மற்றும் குடிநீருக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: