Connect with us

LatestNews

100.நாள் வேலை திட்டத்தில் சம்பளம் இல்லை..வி வசாயத் தொழிலாளர்கள் முற்றுகை..

Published

on

பாஜக கூட்டத்துக்கு சென்று திரும்பிய பாஜக விவசாயி அணி நிர்வாகியை முற்றுகையிட்டு குறையை தெரிவித்த விவசாயத் தொழிலாளர்கள்

பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயனார்குளத்தில் நடந்த பாஜக கூட்டத்துக்கு சென்று மதுரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த மாநில பாஜக விவசாய அணியின் துணைத்தலைவர் முத்துராமன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் உசிலை கலைச்செல்வன் ஆகியோர் வந்த காரை, செல்லம்பட்டி அருகே குறவகுடி கிராமத்தில் 100 வேலை நாள் திட்டத்தில் பணிபுரிந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும், இவர்கள் காரை திடீரென முற்றுகையிட்டனர்.
அதன்பின், பாஜக விவசாய அணியின் மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட விவசாய அணியின் செயலர் கலைச்செல்வன் ஆகியோரிடம், கடந்த ஒரு வருடமாக 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்த சம்பளத்தை ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லையென, முறையிட்டனர்.
இதயணையடுத்த, பாஜக விவசாய அணி நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, விரைவில் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் முத்துராமன், மத்திய அரசானது, இலவச வீடுகள் கட்டும் திட்டம், இலவச எரிவாயு திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அதை விவசாயத் தொழிலாளர்கள் பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மாடு முட்டி ஒருவர் பலி

Published

on

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:

மதுரை

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

LatestNews

பத்திரிக்கையாளர் தாக்கு.

Published

on

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

Continue Reading

LatestNews

தலையாரிக்கு அரிவாள் வெட்டு..

Published

on

சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு கிராம தலையாரிக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி.

சிவகங்கை அருகே பெரிய கோட்டை வழுதனி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் பணிபுரியும் எல்லைப்பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளி கடத்தியுள்ளனர்.இது குறித்து தலையாரி பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த புது குலத்தை சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலையாரியை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் தலையாரியின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடி யுள்ளனர். தலையாரியின் அலறலைக் கேட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.சம்பவம் குறித்து தலையாரி பாண்டி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிவகங்கை நகர காவல் நிலையத்தினர் தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரம்! மேலும் விலை குறைய வாய்ப்பு!

பூக்களின் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரம்! மேலும் விலை குறைய வாய்ப்பு! முதலில்… [...]

திருக்குறளை பனை ஓலையில் எழுதிய சர்தார்ஜி!

திருக்குறள் மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்த, தனது தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில், திருவள்ளுவரின் உருவத்தை இவர் செதுக்கியிருந்தார் திருக்குறளை பனை ஓலையில் எழுதிய சர்தார்ஜி!… [...]

இலவச உள்ளாடை திட்டம் என்று பெண்களுக்கு வலை!

மேலும் சில பெண்களுக்கும் அவர் வலை வீசியது தெரியவந்தது. இலவச உள்ளாடை திட்டம் என்று பெண்களுக்கு வலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜன.17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஜன.17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

செய்திகள்..சிந்தனைகள்…| 16.01.2021

செய்திகள்..சிந்தனைகள்…| 16.01.2021 | Seithikal Sinthanaikal | 16.01.2021| பாஜகவிற்கு எதிராக தேசத்துரோக பிரிவினைவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு கோவிலின் அருகிலிருந்த கிறிஸ்தவ கல்லறை அகற்றம்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: