தமிழ்நாட்டில் அரசு பணிகளை தமிழக மக்களே வ ழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்..

விடுதலை சிறுத்தைகள்
ஆர்பாட்டம்.

வாடிப்பட்டி ஆக.25.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகதமிழ்நாட்டில் அரசு பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் பொறியாளர் தமிழ்நிலவன் தலைமையிலும் பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பேரூர் செயலாளர் கே.பி.அரசு விஜயார் தலைமையிலும் மாவட்ட அமைப்பாளர் சோ ,தளபதி முன்னிலையிலும் சமயநல்லூர் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒன்றிய செயலாளர் தமிழரளன் தலைமையிலும் அவரவர்கள் வீட்டின் முன்பு நின்று குடும்பத்தினரோடு ஆர்ப்பாட்டம் செய்தனர் . அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தை இயக்கங்களின் நிர்வாகிகள் அந்தந்த வார்டுகளில் அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: