கூலித் தொழிலாளி கொலை

இராஜபாளையம் அருகே விறகு வெட்டும் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை சேத்தூர் போலிசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் இசக்கி முத்து என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இதுகுறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது இவர்கள் இருவரும் விறகு வெட்டும் கூலித் தொழிலாளி விறகு வெட்டுவதில் இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது இந்நிலையில் இன்று இசக்கிமுத்துவை மாடசாமி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: