LatestNews
வாலிபர் கொலையில் 5 பேர் கைது
குடிபோதையில் மோதல் வாலிபர் கொலையில் கொலை நடந்த .24 மணி நேரத்துக்குள் 5 பேர் கைது….. மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் வயது 30 இவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பிள்ளைமார் தெரு வைகை ஆற்று ஓரத்தில் பொது கழிப்பறை வாயிலில் நண்பர்கள் பொன்னாங்கண்ணி உள்ளிட்டோர் 6 பேர்.மது அருந்தி கொண்டு இருந்தார்… அப்பொழுது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபனை கொலை செய்துவிட்டு தப்பினர் இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரிமேடு காவல் ஆய்வாளர், பாலமுருகன் தலைமையிலான தனிப்படை வந்தனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் இக்கொலை தொடர்பாக பார்த்திபனின் நண்பர்கள். பொன்னாங்கன் என்கின்ற சங்கர மணிகண்டன். அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துவின் மகன் கோபி என்கின்ற கோபாலகிருஷ்ணன் . கரிமேடு சேர்ந்த கணேசன். மற்றும் ,17 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறார்களும். இக் கொலையில் கைது செய்யப்பட்டனர், கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள். குற்றவாளியை கைது செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை, மேற்கொண்டு வருகிறார்கள்.
LatestNews
தீ விபத்து

வாடிப்பட்டிஅருகே
வைக்கோல்படப்பில்தீ:
வாடிப்பட்டி,ஏப்.10.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன்ஆபிஸ்சாலையில்
பாலன்நகரை சேர்ந்தவர் திருமலைராஜன் மனைவி மகேஸ்வரி இவரது வீட்டின்;
அருகில் வைக்கோல்படப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று திடீர் என்று மதியம்
அந்த வைக்கோல் படப்பில் தீபிடித்தது உடனே அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்
வந்து தீயை அணைத்தனர். ஆனால் காற்றுவீசஅது அதிகமாக பரவியது உடனே
தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில்
தீயணைப்புவீரர்கள் 2மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
3ஏக்கர்வைக்கோல்படப்பின் சேதமதிப்பு ரூ.30ஆயிரமாகும்.
LatestNews
முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்….

மதுரையில் மாநகராட்சி அதிரடி:
மதுரை
*முக கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி* மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக இன்று திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் ரூபாய் 4200 அபராதமாக வசூலிக்கப்பட்டது . மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் நம்மிடம் தெரிவிக்கையில் வரும் வாடிக்கையாளர்கள் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கிருமிநாசினி கடை வாசல் முன் வைக்க வேண்டும் சாலையில் எச்சில் துப்பக் கூடாது எனவும் மீறி தப்பினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் . மேலும் வெளியே வரும்போது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மீறி கவசம் அணியாமல் வந்தால் கட்டாயமாக ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
LatestNews
பக்தர்கள் இன்றி கோயில் விழா…
மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு :
கடந்த ஆண்டை போல கோவிலுக்குள் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
மதுரை
கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.