ரவுடிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்த வாலிபர் கைது

ரவுடிக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் கொடுத்த வாலிபர் கைது….
ராஜபாளையம் அருகே பரபரப்பு…..

ரவுடி துரைமுத்துவை என்கவுண்டர் செய்தாலும் பல துரைமுத்து உருவாகுவார்கள் என சமூக வலைதளத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்கச் சென்ற பொழுது, ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியதால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கை கார்த்திக் என்ற இளைஞர் சமூகவலைதளத்தில், துரைமுத்து என்ற ரவுடியை பிடிப்பதற்கு போலீசார் சீருடை அணியாமல் சென்றதால் அவர் கொல்லப்பட்டதாகவும், போலீசாருக்கு சீருடை எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது, அதை அவர்கள் ஏன் அணியவில்லை என்று தெரியவில்லை, இனிமேல் போலீசார் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ரவுடிகளை பிடிப்பதற்கு அச்சப்பட வேண்டும். துரை முத்து சாகவில்லை எங்களை போன்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கீழராஜகுலராமன் போலீசார், கார்த்திக்கை பிடித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கார்த்திக்கை மதுரை சிறைக்கு அனுப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: