ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம ்…

அலங்காநல்லூரில் ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூரில், மதுரை ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் அமைக்க வேண்டுமென, இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் பல இடங்களில் பால் குளிர்விப்பான் மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூர் பகுதி பல பெரிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். மேலும், கிராமப்புற பகுதிகள் அதிகம் இருப்பதால், இங்கு விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு அதிகம்.
அத்துடன், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கல்லணை, கோட்டைமேடு, புதுப்பட்டி, வாவிடமருதூர், சரந்தாங்கி, பொந்தும்பட்டி, கீழச்சின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மாடு வளர்ப்பும் அதிகம்.
ஆகவே, மதுரை ஆவின் பால் நிர்வாகமானது, ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: