இளைஞர் வெட்டி கொலை

*மதுரையில் மது போதையில் தகராறு இளைஞரை கொடூரமாக வெட்டிக்கொலை : போலீஸ் விசாரணை..!!!*

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 29 வயது,இவர் மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்,இந்த நிலையில் இவர் ஆரப்பாளையம் பகுதியில் பிள்ளைமார் தெரு உள்ள பொது கழிவறை வாசலில் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பர்களுடன் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சக நண்பர்கள் பார்த்திபனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூன்று நண்பர்களை தேடி வருகிறார்கள், மதுபோதையில் நண்பனையே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: